இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. அங்கு நல்ல வரவேற்பை பெற்றது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/04/480-2025-07-04-17-25-04.jpg)
இப்படம் இன்று(04.07.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வெற்றிமாறன் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “ஒரு தந்தையாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷ்ல் தான். இப்படம் அவருடைய கம்ஃபோர்ட் சோனில் இருந்து விலகி ஜாலியான படமாக அமைந்திருக்கிறது. அவருடைய படங்கள் பொதுவாகவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த படம் எனக்கு ரொம்ப அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்தோடு என்னையும் கொண்டு போய்விட்டார் ராம். அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவா சிரமமில்லாமல் நடித்திருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிறைய இடங்களில் அவங்க சொல்றபடி இருந்திருக்கலாமோ என யோசிக்க வைக்கிறது. இந்த படம் எல்லாருக்கும் நெருக்கமான படமாக இருக்கும். படம் பார்த்ததில் இருந்து என்னுடைய குழந்தைகளுடன் நான் எப்படி இருக்கிறேன், அதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை யோசித்து வருகிறேன். அப்படி யோசிக்க வைத்த ராமிற்கும் பறந்து போ படக்குழுவிற்கும் நன்றி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/04/481-2025-07-04-17-23-40.jpg)