/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vetrimaaran.jpg)
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் அரசிற்கும் இடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, இரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, குடியரசு தினத்தன்று நடைபெற்ற ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இயக்குநர் வெற்றிமாறன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குரலற்றவர்கள் தங்களது குரலை வெளிப்படுத்திக்கொள்ளும் வடிவமே போராட்டம்.அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் வழங்கப்பட்டதே. அது மக்கள் நலனையே காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டாளியாக செயல்படக் கூடாது. இந்த தேசத்தின் ஆன்மாவைக் காப்பதற்காக விவசாயிகள் முயற்சிக்கிறார்கள். அவர்களின் உரிமைக்காக போராடுவதும் போராட்டத்தை ஆதரிப்பதுமே ஜனநாயகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)