எம் எம் ஸ்டுடியோஸ் சார்பில் மூர்த்தி வழங்கும், தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிளாக் கோல்டு’. வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, வெங்கடேஷ், அருள் சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.  

Advertisment

இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று கட்ட படப்பிடிப்பாக ஏப்ரலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது. ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது.