Vetri Maaran produced Anel Meley Pani Thuli movie song released

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெற்றிமாறன், 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', தனுஷின் 'கொடி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'அனல் மேலே பனித்துளி'. ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'அனல் மேலே பனித்துளி' படத்தின் 'கீச்சே கீச்சே' லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு கிராமத்தில் விழா ஒன்று நடக்கிறது, அந்த விழாவின் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வியலை விவரிக்கும் வகையில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

Advertisment