Advertisment

'11,000 இந்தியத் தாய்மார்களின் கண்ணீரைப் பேசும் ஜோதி' - ட்ரைலர் வெளியீடு

vetri 'jothi' movie trailer released

'8 தோட்டாக்கள்', 'ஜீவி' உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்துப் பிரபலமான வெற்றி தற்போது 'ஜோதி' படத்தில் நடித்துள்ளார். ராஜா சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை கிருஷ்ணா பரமாத்மா இயக்கியுள்ளார். ஷீலா, பூஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'ஜோதி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 4217, பீகாரில் 6950 என இந்தியாவில் மொத்தம் 11,000 குழந்தை சம்பந்தமான வழக்கை பேசுவது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கொண்டு உருவாகியுள்ள இந்த ட்ரைலர் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

trailer.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe