vetrimaaran

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘அசுரன்’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், ‘அசுரன்’ படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும், ‘அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், ‘அசுரன்’ படத்தின் நாயகன் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில், திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.