Advertisment

பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்

veteran actress vasantha passed away

பழம்பெரும் நடிகை வசந்தா (82) காலமானார்.எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடகக் குழுவில்தனதுநடிப்பு பயணத்தை ஆரம்பித்த இவர்,பின்பு திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். 1965 ஆம் ஆண்டு வெளியான 'இரவும் பகலும்' படத்தில் ஜெயசங்கருக்குஜோடியாக நடித்து பிரபலமானார். பின்பு அதே ஆண்டு வெளியான 'கார்த்திகை தீபம்' படத்தில்அசோகனுக்கு ஜோடியாக நடித்தார்.மேலும் அடுத்த தலைமுறை நடிகர்களானரஜினி மற்றும் கமல் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு அம்மாவாக 'ராணுவ வீரன்' படத்திலும்ஸ்ரீதேவிக்கு அம்மாவாக கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படத்திலும்நடித்தார்.

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வசந்தா சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (19.05.2023) மாலை உயிரிழந்தார். அவரதுமறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.வசந்தாவின் உடலுக்கு இன்று மதியம் 1.30 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

Advertisment

passed away Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe