தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சரோஜா தேவி. தமிழில் 70-களின் முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக சூர்யா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.
திரைத்துறையில் 7 தசாப்தங்களாக பயணித்து மூத்த நடிகையாக வலம் வந்த இவர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 87. இவரது மரணத் தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.