/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/486_8.jpg)
மேடை நாடகங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் அடடே மனோகர். கிட்டத்தட்ட 3,500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ள இவர், 6 நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார். கிரேஸி மோகன் மற்றும் எஸ்.வி சேகர் இயக்கிய நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 1986 மற்றும் 1993ஆம் ஆண்டில் அன்றைய டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'அடடே மனோகர்’ என்ற தொடரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
திரைப்படங்களிலும் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன்நகைச்சுவை காட்சிகளில் நடித்ததோடு, அந்நியன் உட்பட 35 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று (27.02.2024) இரவு காலமானார். இவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)