Advertisment

நடிகர் அரவிந்த்சாமிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் 

aravind swami

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'சதுரங்க வேட்டை' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் மனோபாலா 'சதுரங்க வேட்டை 2' படத்தை நடிகர் அரவிந்த்சாமியை வைத்து தயாரித்தார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி தன் சம்பளபாக்கியான ரூ1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று நடிகர் மனோபாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் நடிகர் மனோபாலாவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மனோபாலா அனுப்பிய பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு மேலும் ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக ரூ25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மனோபாலாவின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா மற்றும் அரவிந்த்சாமி இரு தரப்பினரும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

aravindswami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe