Advertisment

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம்

the verdict movie update

சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் இனைந்து நடித்துள்ள படம் தி வெர்டிக்ட். கிருஷ்ணா சங்கர் இப்படத்தை இயக்கியிருக்க பிரகாஷ் மோகன்தாஸ் தயாரித்துள்ளார். பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.

Advertisment

இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் 23 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாக இப்படம் இருக்கிறது. இப்படத்தை தயாரித்த அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படமாக இப்படத்தை அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை சினேகா, பிரசன்னா தம்பதியினர் வெளியிட்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe