'வெப்பம் குளிர் மழை' படத்தின் டிரைலர் வெளியீடு!

Veppam kulir mazhai trailer release

தயாரிப்பாளர் திரவ், இஸ்மத் பானு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெப்பம் குளிர் மழை'. இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மையக்கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூகத் தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்றத் தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TRAILER RELEASED
இதையும் படியுங்கள்
Subscribe