mr.chandramouli

Advertisment

simbhu

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

'செக்கச் சிவந்த வானம்' படத்தையடுத்து நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 2019ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகைகள், பின்னணி கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது விளக்கமளித்து பேசும்போது.... "நான் தற்போது 'பார்ட்டி' படத்தின் பின்னணி வேலைகளில் பிசியாக இருக்கிறேன். சிம்பு படத்தின் ஸ்கிரிப்ட்டை இன்னும் முடிக்க வில்லை. விரைவில் யார் நடிகை என்றும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலையும் வெளியிடுவேன். அதுவரைக்கும் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">