Skip to main content

''செல்லப் பிராணிகளை வெளியே ஆதரவின்றி விடாதீர்கள்..!'' - நடிகர் வெங்கடேஷ் வேண்டுகோள் 

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும்  நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் கரோனா பரவும் என்று பரவிய வதந்தியினால் பலரும் தங்களுடைய செல்லப் பிராணிகளை வெளியே ஆதரவின்றி விட்டுவிடுவதை கண்டித்து, பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

vxv

 

"இது மனித குலத்துக்கு மட்டுமல்லாது, அனைத்து உயிரினங்களுக்குமே கடினமான ஒரு காலகட்டமாகும். தங்கள் செல்லப் பிராணிகள் மூலம் வைரஸ் பரவும் என்று பயந்து மக்கள் அவற்றைக் கைவிடுவதாக வரும் செய்திகள் இதயத்தை நொறுக்குகின்றன. இந்த நம்பிக்கை பொய் என்று எண்ணற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் நாம் மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. நம்முடைய நண்பர்களான விலங்குகள் மீதும் அன்பைப் பொழிவோம். இந்த ஊரடங்கில் நாம் தொடர்ந்து வீட்டில் இருக்கும் தருணத்தில் அவை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரையும் நேசிப்போம். அனைத்தும் முடிந்த பிறகு முன்பைவிட, அதிக வலிமையுடன் நமது செல்ல பிராணிகளுடன் இந்த அச்சுறுதலில் இருந்து வெளியே வருவோம்" என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலுங்கு அசுரன் பேசப்போகும் சாதிப் படுகொலை சம்பவம்?

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, மகன்களாக டீஜே, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 
 

narapa

 

 

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் என்பதால் இதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் போட்டிபோட்டார்கள். அந்த வகையில் தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் வாங்கியது. அதன் பின்னர் அந்த நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணுவும் தயாரிக்கிறார்.

தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. பலரும் இது சாத்தியமாகுமா என்று எதிர்பார்த்த நேரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அசுரன் படத்திற்கு தெலுங்கில் நாரப்பா என்று பெயரிட்டுள்ளனர். 

இந்நிலையில் அசுரன் படத்தின் பிளாஷ்பேக்கில் தனுஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தங்கள் சமூகத்திற்கு நடந்த அநீதியை பொறுத்துக்கொள்ளாமல் தவறு செய்தவர்களை அரிவாளால் வெட்டிவிடுவார். இந்த கதையைதான் தெலுங்கிலும் வைப்பார்களா என்று எண்ணம் இருந்தது. இந்நிலையில் உண்மையில் நடந்த கரம்சேடு சாதி படுகொலையின் பின்னணியில்தான் நாரப்பாவின் கதையின் பிளாஷ்பேக்கில் வர இருப்பதாக தகவல் வெளியாகிறது. 

கரம்சேடு என்னும் பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு தலித் மற்றும் கம்மா என்னும் இரு பிரிவினர்களுக்கு சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 6 தலித்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த உண்மை சம்பவத்தை தழுவிதான் நாரப்பா படம் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.