நடிகர் சிம்பு, தற்போது நடித்து வரும் படம் 'மாநாடு'. கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கும்இப்படத்தை, சுரேஷ்காமாட்சிதயாரிக்கிறார். தற்போது, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு பணிகள்நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தீபாவளியன்று, சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தின் டீஸர் வெளியானது. அதற்கு வாழ்த்துத் தெரிவித்த வெங்கட் பிரபு, 'மாநாடு' படத்தின்ஃபர்ஸ்ட் லுக்விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாளை 'மாநாடு' படக்குழுவிடமிருந்து முக்கிய அறிவிப்புவெளியாகும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெங்கட்பிரபு தனதுட்விட்டர் பக்கத்தில், "சிம்புரசிகர்களே, தயாராகுங்கள். நாளை காலை9.09 மணிக்கு, மாநாடு குழுவிடமிருந்துஸ்பெஷலான அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது" எனக் கூறியுள்ளார்.