Advertisment

வெங்கட் பிரபு பிறந்தநாள்; தளபதி 68 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

venkat prabu birthday thalapathy 68 update

தமிழ் சினிமாவில் தன் காமெடி கலந்த கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்போது விஜய்யை வைத்து, 'தளபதி 68' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளமேநடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இந்த படத்தின் அப்டேட் ஒன்றைபகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜீனியஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் நிறைய வித்தியாசமான ஷாட்டுகள் மற்றும் ஷெட்யூல்கள் தளபதி 68ல் இருக்கிறது. தாய்லாந்தில் ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கினோம், அதுவும் இரவில் படமாக்கப்பட்டது. அதனால் வெங்கட் பிரபு அவரது பிறந்தநாள் அன்று விடுமுறை எடுத்துக்கொள்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor vijay archana kalpathi thalapathy 68 venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe