Advertisment

"சீக்கிரம் பார்ட்டி கொடுங்க. தமிழ்நாடே காத்திருக்கு" - வெங்கட் பிரபு

venkat prabhu wishes producer t.siva for her birthday

Advertisment

வெங்கட் பிரபு, தற்போது நாக சைதன்யாவை வைத்து 'என்.சி 22' படத்தை இயக்கவுள்ளார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளார். இதனிடையே வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் படத்தின் அப்டேட், திரைபிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது என ஆக்டிவாக இருந்து வருகிறார் .

அந்த வகையில் வெங்கட் பிரபு, இன்று பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சிவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா சார். சீக்கிரம் பார்ட்டி கொடுங்க. தமிழ்நாடே காத்திருக்கு" என குறிப்பிட்டு சிவாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் 'பார்ட்டி' படத்தில் நடித்துள்ள படக்குழுவினர் இடம்பெற்றுள்ளார்கள்.

பார்ட்டி படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது விரைவில் இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் இன்னும்வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

venkat prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe