Advertisment

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘தளபதி 68’ அப்டேட்

Venkat Prabhu update  about thalapathy-68

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' எனத்தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பர்,அக்டோபரில்ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஎக்ஸ் (ட்விட்டர்) பதிவில், இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ‘எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்’என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Advertisment

actor vijay archana kalpathi venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe