/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/simbu-str_4.jpg)
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. திடீரென கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் தடைப்பட்டது. இந்நிலையில் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.
இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. தற்போது மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு, விரைவில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.
‘மாநாடு’ படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)