venkat prabhu thanks ilaiyaraaja

Advertisment

மாநாடு, மன்மதலீலைபடத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தற்காலிகமாக என்.சி 22 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் நடிகர் ராணா டகுபதி, சிவகார்த்திகேயன், பாரதிராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் வெங்கட் பிரபுவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைரீட்வீட் செய்த வெங்கட் பிரபு, இந்த ஆஸ்கருக்கு நன்றி ராஜாப்பா. இது என்னுடைய வாழ்நாள் சாதனை" என்று குறிப்பிட்டுள்ளார்.