Venkat Prabhu

வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த மாதத்தின் இறுதியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="913173ad-80c4-4bdd-960d-04fcf2dfe2fd" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_1.jpg" />

Advertisment

நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், "இந்தப் படத்தின் கதையை கூறியவுடனேயே சிம்புவிற்கு பிடித்துவிட்டது. அவருக்கு இந்தப் படத்தின் ஐடியாவே மிகவும் பிடித்திருந்தது. முழுக்கதையை தயார் செய்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. சிம்பு சார் உண்மையிலேயே மிகவும் கொடுத்துவைத்தவர். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் உண்மையான ரசிகர்கள். அறிவிப்பிலிருந்து ரிலீஸ்வரை சமூக வலைதளங்களில் படத்தை ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர். சென்னை 600028 - 2க்கு பிறகு மாநாடுதான் எனக்கு தியேட்டர் ரீலிஸ். அதனால் இந்தத் தருணமே மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. ப்ளுசட்டை மாறனைத் தவிர அனைவருமே படத்திற்கு பாசிட்டிவான ரிவ்யூ கொடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன். அவர் பெயரையும் இங்கு சொல்ல வைத்துவிட்டார். என்ன கொடுமைசார் இது. இருந்தாலும், அவருக்கும் நன்றி. அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி" எனக் கூறினார்.