venkat prabhu sivakarthikeyan watch the goat in theatres

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர்.

Advertisment

இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்று (05.09.2024) பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் முதல் காட்சி தொடங்கியது. மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலை 4 மணிமுதல் சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. திரையரங்குகளில் வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பேனருக்கு பால் அபிஷேகம் செய்து மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து திரை பிரபலங்களும் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அந்த வகையில் வெங்கட் பிரபு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் படம் பார்த்துள்ளார். சிவகார்த்திகேயன் கோவையில் உள்ள திரையரங்குகளில் படம் பார்த்துள்ளார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, வைபவ் ஆகியோரும் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.