style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் டபிள்யு புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் திரு.சரவண சுந்தரம் தயாரித்து, திரு.பொழிலன் இயக்கத்தில் உருவான 'இரா' குறும்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை காண 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எழுத்தாளர் விவேகா, நடிகர்கள் பிக்பாஸ் ஷாரிக், கயல் சந்திரன், அரவிந்த் ஆகாஷ் போன்ற திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். 'இரா' குறும்படத்தை கண்டு தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இக்குறும்படத்தின் மையக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதத்தையும் அனைவரும் பாராட்டினர்.மேலும் புதிய இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் இந்த குறும்படத்தை தயாரித்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறினார்.