Advertisment

"இந்த சேட்டைக்கான விதை நீங்க போட்டது" - எஸ். ஜே சூர்யாவுக்கு பதிலளித்த பிரபல இயக்குநர்

venkat prabhu replies sj surya about manmadha leelai trailer tweet

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைத்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் வெளியான கிலிம்பஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று(21.3.2022) 'மன்மதலீலை' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என்ற வசனங்களுடன் வெளியான ரொமான்டிக் ட்ரைலர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த எஸ்.ஜே சூர்யா, "சார் இது வெங்கட்பிரபுவின் சேட்டை" எனட்வீட் செய்திருந்தார். இதனை ரீட்வீட் செய்த இயக்குநர் வெங்கட் பிரபு, "ஆனா இந்த சேட்டைக்கான விதை நீங்க போட்டது... லவ் யூ சார்" எனப் பதிலளித்துள்ளார். மன்மதலீலை படத்தின் ட்ரைலருடன் இவர்களது ட்வீட்களும் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.

venkat prabhu Manmatha Leelai movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe