Advertisment

'இந்த நட்பு நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்' - பிரெண்ட்ஷிப் படக்குழுவை பாராட்டிய வெங்கட் பிரபு

venkat prabhu

Advertisment

ட்விங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் ஆறு வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா. சமீபத்தில் இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது..."நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்" என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். எப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

venkat prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe