வெங்கட் பிரபு வெளியிடும் ‘பாராடாக்ஸ்’ குறும்படம்

419

 

தமிழில் ‘பாராடாக்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை  கார்த்திகேயன் என்பவர் ‘தி சைலர் மேன் பிக்சர்ஸ்' சார்பில் தயாரித்துள்ளார். பிரியா கார்த்திகேயன் இயக்கியிருக்கும் இப்படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மிஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். 

இப்படம் சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சைக்காக செல்லும் நாயகன் சிகிச்சையின் போது மயக்க நிலை அடைய அப்போது அவனுக்கு சில நினைவுகள் வருகிறது. இறுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததா, நாயகன் குணமானாரா இல்லையா என்பதை இந்த குறும்படம் சொல்வதாக கூறப்படுகிறது.

418படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படம் குறித்தான ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 11ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெங்கட் பிரபு இப்படத்தை வெளியிடுகிறார்

venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe