/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1ff.jpg)
சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு கொண்ட அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அசோக்செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படம் குறித்து இயக்குனர் கூறும்போது...
"திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட ஜாலியான படமாக இது இருக்கும். இது 1980களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு’ படத்தின் நவீன வடிவமாகவும், ஆடியன்ஸுக்கு ஒரு புதிவித திரைக்கதை அனுபவமாகவும் இப்படம் இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது" என கூறியுள்ளார். ‘மாநாடு‘ படத்திற்கான பணிகள் செய்துகொண்டிருந்தபோதே இந்தப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்து விட்டார். இதனால் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)