Advertisment

"நீங்கள் அந்த மாற்றமாக இருக்க வேண்டும்" - வேட்டைக்கு தயாரான வெங்கட்பிரபு

venkat prabhu naga chaitanya movie titled as custody

Advertisment

வெங்கட்பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து 'என்.சி 22' படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'கஸ்டடி' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும், தனது பெயருக்கு பின்னால் 'வெங்கட்பிரபு கேம்', 'வெங்கட்பிரபு பாலிடிக்ஸ்' எனப் படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் ஒரு வார்த்தையை இணைத்து வரும் வெங்கட்பிரபுஇந்தப் படத்தில் 'வெங்கட்பிரபு வேட்டை' என வைத்துள்ளார்.

மேலும், தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இப்போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்போஸ்டரில் "உலகத்தில் மாற்றம் காண ஆசைப்பட்டீர்கள் என்றால், நீங்கள் அந்த மாற்றமாக இருக்க வேண்டும்" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

venkat prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe