Skip to main content

ஓடிடி நிறுவனம் தொடங்கிய வெங்கட் பிரபு!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Venkat Prabhu

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை நாயகனாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். இதற்கிடையே, அவர் பி.டி.சி (BTC) என்ற ஓடிடி செயலியைத் தொடங்கியுள்ளார். ப்ளாக் டிக்கெட் சினிமாஸ் என்ற தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஓடிடி செயலியை அவர் தொடங்கியுள்ளார்.

 

இந்த ஓடிடி செயலி குறித்து ப்ளாக் டிக்கெட் சினிமாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "ப்ளாக் டிக்கெட் சினிமாஸ் (Black Ticket Cinema) மற்றும் ஹேங்ஓவர் டெக் (Hangover tech Pvt ltd) இணைந்து உருவாக்கிய பி.டி.சி எனும் ஓடிடி செயலியுடைய பயன்பாட்டின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறது. தற்பெருமையாக இல்லாமல் உண்மையிலயே இந்த செயலி இந்தியப் பொழுபோக்குத் துறையில் ஒரு மைல்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மொபைல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் வேளையில், மக்கள் விரும்பும் இடத்தில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.  இந்த செயலி பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் இருவரையும் மகிழ்விக்கும் நோக்கோடு செயல்படும்

 

பார்வையாளர்களுக்கு இச்செயலியில் என்ன உள்ளது?

 

இது மாத சந்தா கட்டும்படியான செயலி அல்ல. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதற்கு மட்டும் பணம் செலுத்தி அந்த படைப்பை மட்டும் பார்க்கலாம். 

உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். 

நேரடி நிகழ்வுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் நிகழ்வுகள் உலகளவில் அரங்கேறிவரும் நிலையில், BTC செயலி அதனைக் காண வழிவகை செய்கிறது. பல்வேறு இசைக்கலைஞர்களுடைய இசைக்கச்சேரிகள் முதலாக பல நிகழ்வுகள் பி.டி.சி செயலி மூலம் உங்கள் வீடுகளை வந்தடையும்.

 

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கான சிறப்பம்சங்கள் 


Forensic Watermarking - an Anti-piracy தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஓடிடி - பி.டி.சி. ஒரு பயனர் ஒரு படத்தைப் பார்க்கும் பொழுது அவருக்கென ஒரு watermark உருவாக்கப்படும். அது திரையில் தெரியாது. ஆனால்  திருட்டு நிகழ்வுகள் நடந்தால் அதனைக் கண்டுபிடிக்க அது மிக உதவிகரமாக இருக்கும்

 

உங்களது படைப்புகள் உங்களுக்கே சொந்தம். உங்களது படைப்புகளுக்கு பி.டி.சி உரிமை கொண்டாடாது. நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களது படைப்புகளை தளத்தில் இருந்து நீக்கி கொள்ளலாம். இதைப் படிக்கும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்கு இந்த செய்தி முகத்தில் புன்னகையை வரவழைக்கும் என்பதை நாங்கள் அறிவோம். 

 

உங்களது படைப்புகளை Geo-Lock செய்து கொள்ளலாம். உங்களது திரைப்படமோ தொடரோ இந்தியத் திரையரங்கில் வெளியிடுவதாக இருந்தால், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பார்க்காத வண்ணம் Geo-Lock செய்து கொள்ளலாம். அதே நேரம் உலகின் மற்ற நாடுகளில் அனைவரும் பார்த்துக்கொள்ளும்படி செய்யலாம். 

 

படைப்பு குறித்த வெளிப்படையான தரவுகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது படைப்புகளை இதில் பதிவேற்றும்போது உங்களுக்கு ஒரு லாகின் ஐடி தரப்படும் அதன்மூலம் உங்கள் படைப்பை எத்தனை பேர் பார்க்கின்றனர், எங்கு ஆரம்பிக்கின்றனர், எங்கு ஸ்கிப் செய்கின்றனர் என அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம். 

 

உங்கள் படைப்புகளை பார்வையாளர்கள் பார்க்கும்போது வெளியாகும் விளம்பரங்களில் இருந்து வருவாயில் ஒரு பங்கை நீங்கள் பெறுவீர்கள். 

 

தயாரிப்பாளர் சங்கமும் அவர்களுக்கு உரிய ஒரு  பங்கை இதில் பெறுகிறது. படைப்புகளுடைய தயாரிப்பாளரின் வருமானத்திலிருந்து 2 சதவீதமும், பி.டி.சி செயலியின் வருமானத்திலிருந்து 2 சதவீதமும் தயாரிப்பாளர் சங்கத்தை சென்றடையும். 

 

எனவே, கேள்வி 'ஏன் பி.டி.சி?' என்பதல்ல, 'ஏன் பி.டி.சி கூடாது?' என்பதுதான்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

‘14 ஆண்டுகளுக்குப் பிறகு...’ - விஜய்க்காக குவிந்த ரசிகர்கள்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay arrived in kerala for goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.