/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/93e38a6a-406e-468e-8823-dc57fe759890.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். மேலும் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி கடந்த வாரம் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.
திரைபிரபலங்கள் பலரும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி மீண்டும் ஒரு கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் 6.05 மணிவரை நடைபெற உள்ள கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், "சாதி, மதம் மொழி, கடந்து இந்த உலகில் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்றாலும் நம் கைகளை ஒன்றாக இணைத்து, நம் எஸ்.பி.பி விரைவாக குணமாகி மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்" என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)