Advertisment

சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு

venkat prabhu directing sivakarthikeyan next movie

'மாநாடு' 'மன்மத லீலை' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும்இப்படத்திற்கு தற்காலிகமாக என்.சி 22 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதைக்கு சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஓகே சொல்லி விட்டதாகவும், படத்தை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும்கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. இருப்பினும் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் நாக சைதன்யா படத்தின்பணிகள் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் படத்தின்பணியில் கவனம் செலுத்துவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறன்றனர்.

Advertisment

'டான்' மற்றும் 'அயலான்' படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்.கே 20' படத்தில் நடித்து வருகிறார். இதில் டான் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan sk 20 venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe