Advertisment

‘தளபதி 68’ - அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு பதில்!

Venkat Prabhu about Thalapathy 68

காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்த சுனைனா முதன்மை கதாபாத்திரமாக நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ரெஜினா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Advertisment

இதில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில் “இந்த ரெஜினா படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான சதீஷ் குமார் எனக்கு ஆரம்பகால நண்பன். எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நபர் அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்தப் படத்தில் நடித்த சுனைனா இதற்கு முன் இப்படி ஒரு பரிமாணத்தில் பார்த்ததே இல்லை . அந்த அளவுக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்

Advertisment

மேலும், விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது "இப்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டை கூறினால், விஜய்யே என்னை திட்டுவார். அதனால் லியோ படம் வெளிவரட்டும் அதன்பின்பு தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ் கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.

actorvijay venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe