venkat prabhu about rajadurai the goat movie story comparison

இயக்குநர் வெங்கட் பிரபு கடைசியாக விஜய்யை வைத்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்பா - மகன் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த செப்டம்பர் 5 வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.455 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இப்படம் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான ராஜதுரை படக் கதை போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் இருந்தது. இந்த விமர்சனம் குறித்து தற்போது பேசியுள்ளார் வெங்கட் பிரபு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, “உண்மையிலே கோட் பட ரிலீஸுக்கு பின்பு தான் இந்தப் படம் எஸ்.ஏ சந்திரசேகர் பண்ணிய ராஜதுரை படத்தின் கதை என்பது தெரியும். சோசியல் மீடியாவில் சொன்ன பிறகு அந்தப் படத்தை பார்த்தேன். இது தெரிந்திருந்தால் முன்னாடியே பார்த்திருப்பேன். இன்னும் கொஞ்சம் சிறப்பாகவும் கோட் கதையை எடுத்திருக்கலாம்.

Advertisment

அப்பா - மகன் கதை என்பது உலகளாவிய ஸ்கிரிப்ட். அதனால் நிறைய படங்கள் பார்த்தோம். ஆனால் ராஜதுரை படத்தை எப்படி மிஸ் செய்தேன் என தெரியவில்லை. சினிமா பார்த்துத்தான் நான் எல்லாமேகற்றுக்கொண்டேன். அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இது. சினிமா நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். ஒரு காட்சியில் இருந்து கூட கதை கிடைக்கும். காதல் படக் கதையே ட்ரைனில் தனது மனைவிக்கு இப்படி நடந்தது என டைரக்டரிடம் கூறியதை வைத்துதான் உருவானது. அதனால் எங்கு இருந்து வேண்டுமானாலும் கதை கிடைக்கும்” என்றார்.