"சார் 'தல' பர்த்டே! பாத்து செய்ங்க!" - அழகிரி மகனிடம் வெங்கட் பிரபு கோரிக்கை!

bhfdhd

அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான ‘மங்காத்தா’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அஜித்தின் ஐம்பதாவது படமாக உருவான இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், வைபவ், அஞ்சலி உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகுஅஜித் இதில் வில்லனாக நடித்ததற்கு ரசிகர்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அஜித்தின் கேரியரிலும் இப்படம் பெரும் மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி அஜித் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியிடம் ‘மங்காத்தா’ படம் மறு வெளியீடு குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

vbdshdfs

"சார் வர மே 1ஆம் தேதி தல க்கு 50வது பிறந்தநாள். அதனால் நம் தல 50வது படமான ‘மங்காத்தா’ படத்தை உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்தால் ரசிகர்கள் நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருப்போம். பாத்து செய்ங்க" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

ACTOR AJITHKUMAR venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe