kadaikutty singam

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் தெலுங்கில் 'சின்னபாபு' என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தை இந்தியாவின் துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு பார்த்துவிட்டு வாழ்த்து கூறி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.... "சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்" என பாராட்டியுள்ளார். நாட்டின் துணை குடியரசு தலைவர் படத்தை பார்த்து பார்ட்டியதற்கு படக்குழுவினர் அவருக்கு தற்போது நன்றி தெரிவித்து உற்சாகமாகியுள்ளனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">