Vendhu thaninthadhu kaadu two part film

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தை ஒரே பாகமாக எடுக்கத்தான் கெளதம் மேனன் திட்டமிட்டிருந்தாராம், ஆனால் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்றும், அதனால்தான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் கெளதம் மேனன் முடிவு செய்துள்ளாராம். அதற்காக முதல் பாகத்தில் இரண்டாம் பாகத்தில் லீட் கொடுப்பதற்காக அதற்கான காட்சிகளை படக்குழு லக்னோவில் தற்போது படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. 20 நாட்களுக்குள் நடத்தி முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.