Vendhu Thanindhathu Kaadu stunt scene made single shot

Advertisment

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இறுதிக்கட்ட பணியில் உள்ள இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="42b51145-4968-4185-9225-0e22c8f97dc4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_3.jpg" />

இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டை கட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அதே போன்ற ஒரு சிங்கிள் ஷாட் வெந்து தணிந்தது காடு படத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து நிமிட சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சி மாநாடு படத்தைப் போன்றே நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் கூறப்படுகிறது.