ஏ.ஆர்.ஆர். இசையில் மிரட்டும் சிம்பு; லூப் மோடில் பார்க்க வைக்கும் 'வெந்து தணிந்தது காடு' டீசர்!

Vendhu Thanindhathu Kaadu movie teaser released

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துவருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ad

முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பைமும்பையில் நடத்திவருகிறது.சமீபத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கிராமத்து பையன் கெட்டப்பில் சிம்பு நடித்துள்ள இப்படத்தின்டீசர் சமூகவலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

actor simbu gautham menon Vendhu Thanindhathu Kaadu
இதையும் படியுங்கள்
Subscribe