vendhu thanindhathu kaadu movie released two days late Telugu

Advertisment

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையைமையமாக வைத்து எடுக்கப்பட்டுபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில்'வெந்து தணிந்தது காடு' படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று 'லைஃப் ஆப் முத்து' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில், சொன்னபடி கடந்த 15 ஆம் தேதி தமிழில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியானது. ஆனால் டப்பிங் முடிக்காததால் தெலுங்கில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இரண்டு நாள் தாமதமாக இன்றுதான் 'லைஃப் ஆப் முத்து' என்ற பெயரில் படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.