Advertisment

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" - இளம் நடிகை வேண்டுகோள்!

fnfnngf

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன.

Advertisment

அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், நடிகை வெண்பா நேற்று (14.06.2021) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை வெண்பா, “இறுதியாக! தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எல்லாரும் தயவுசெய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இது நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் பாதுகாப்பாக அமையும். தாமதிக்க வேண்டாம். தயவுசெய்து முகமூடி அணியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

venba
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe