நிஜ போலீஸிடம் சிக்கிக்கொண்ட ஸ்ரேயாவை காப்பாற்றிய விமல்!

மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘மை பாஸ்’. பாபாநாசம், தம்பி உள்ளிட்ட படங்களை எடுத்த ஜீத்து ஜோசப்தான் இந்த படத்தை மலையாளத்தில் எடுத்தவர். தற்போது இந்த படத்தை தமிழில் ‘சண்டக்காரி’ என்று ரீமேக் செய்து வருகின்றனர்.

shreya

மதுர, சாக்லட், அரசாங்கம், மிரட்டல், மோகினி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.மாதேஷ்தான் சண்டக்காரி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த பகுதிக்கு ஸ்ரேயா தவறுதலாக போனதால் அங்கிருந்த லண்டன் போலீஸார் அவரை பிடித்துக்கொண்டனர். ஸ்ரேயாவிடமும் உரிய ஆவணங்கள் அப்போது கையில் இல்லாததால், போலீஸார் அவரிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த நடிகர் விமல் ஸ்ரேயாவின் ஆவணங்களை போலீஸாரிடம் காண்பித்து அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

shreya vimal
இதையும் படியுங்கள்
Subscribe