Advertisment

ஓடிடி தளம் தொடங்கிய தயாரிப்பாளர்!

lguguf

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் விதமாக, “Vels Signature” எனும் புதிய டிஜிட்டல் தளமொன்றை நிறுவியுள்ளார்.

திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும் புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அறிமுகப்படுத்துகிறது.

இந்த டிஜிட்டல் தளத்தின் முதல் ஆல்பம் பாடலாக 'Criminal Crush' வெளியாகிறது. இப்பாடலை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து “கோமாளி” படத்தின் இணை இயக்குநர் ருத்ரா மணிகண்டன் மற்றும் “பப்பி” பட இணை இயக்குநர் க.ச.ஆனந்த் ஆகியோர் இயக்கியுள்ளனர். ட்ரீம் பிக் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், நீரஜ் எம் இந்த ஆல்பத்தினை இணைந்து தயாரித்துள்ளார். இப்பாடலை ராக்ஸ்டார் அனிருத்தும், சூப்பர் சிங்கர் புகழ் ஶ்ரீனிசா ஜெயசீலனும் இணைந்து பாடியுள்ளனர்.

Advertisment

இப்பாடலில் நாயகப் பாத்திரத்தை ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் நடிக்க, நாயகி பாத்திரத்தை ‘கருப்பன்’ பட நாயகி தன்யா ரவிசந்திரன் நடித்துள்ளார். சுயாதீன இசையமைப்பாளர் காட்சன் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, கோகுல் வெங்கட் படத்தொகுப்பு செய்துள்ளார். எம்ஜிஎம் பாடல் வரிகள் தந்துள்ளார்.

isari ganesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe