/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/25_27.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு, மஹா ஆகிய படங்கள் ரிலீசிற்குத் தயாராகிவருகின்றன. இதில், மாநாடு திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாகப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநாடு படத்தில் நடித்துமுடித்த கையோடு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கவனம் செலுத்திவருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படம் தவிர்த்து, கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் 'பத்து தல' படத்திலும் சிம்பு கவனம் செலுத்திவருகிறார்.
இந்த நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்புவின் 48ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'வெந்து தணிந்தது காடு' படத்தைத் தொடர்ந்து, மற்றொரு படத்திற்காகவும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், இப்படம் தொடர்பான முழுமையான விவரங்களை நாளை அறிவிக்க உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)