Advertisment

1,500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணிப் பாடகர் வேல்முருகன்!

fhf

திரையுலகினர் பலரும் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வந்த நிலையில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் அன்னையர் தினத்தை முன்னிட்டு 1,500 பேருக்கு உணவு வழங்கியுள்ளார். தமிழில் பிரபலமான பின்னணிப் பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். பாடகராக ரசிகர்களைக் கவர்ந்த இவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு அயனாவரத்தில் இருக்கும் மக்கள் 1,500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார். இவருடன் டெப்டி செகரெட்டரி பிரகாஷ் ஐ.ஏ.எஸ், ஐகோர்ட் செகரட்டரி மோகன், அடிஷனல் செகரிடி நாகப்பன் ஆகியோர் இணைந்து 1,500 பேருக்கு உணவு கொடுத்துள்ளார்கள். மேலும் ''அம்மா என்று சொல்லி பாருங்க... அந்த வார்த்தைக் கூட தெய்வமாகுங்க... கடவுளிடம் கேட்டு பாருங்க... தாயின் கருவறையே கோயில்தானங்க...'' என்ற பாடலையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் பின்னணிப் பாடகர் வேல்முருகன்.

Advertisment

Singer Vel Murugan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe