தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் சமுத்திரக்கனியின் படம்!

Samuthirakani

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெள்ளை யானை'. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது.

தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்துவருவதால் ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து திரைத்துறையினர் மத்தியிலேயே பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் எடுத்த ‘வெள்ளை யானை’ படக்குழு, படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட முடிவெடுத்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) சன் தொலைக்காட்சியில் ‘வெள்ளை யானை’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக சன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘ஏலே’ திரைப்படமும் சமீபத்தில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

samuthirakani
இதையும் படியுங்கள்
Subscribe