நடிகர் ஏ.எல்.உதயா மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் மருமகனான ஹமரேஷ் நடிகராக அறிமுகமாகும் படம் ‘ரங்கோலி’. இப்படத்தை இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். இவர் இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக இருந்தவர். கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைக்களமான இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெறும் ‘எங்கெங்கும் வானம்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. சுந்தரமூர்த்தி இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் இந்தப் பாடலை பாடியுள்ளார். தமிழ்த்திரையிசை ரசிகர்கள் மறக்க முடியாத பாடலாசிரியரானமறைந்த நா.முத்துக்குமாரின் உதவியாளராகத்தொடங்கி 'நேரம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவரும்,இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநருமானபாடலாசிரியர் வேல்முருகன் இப்பாடலை எழுதியுள்ளார். இப்பாடலின் வரிகள் சமீபத்தில் பலராலும் கவனிக்கப்பட்டு பாராட்டுகளைப்பெற்று வருகிறது.