ADVERTISEMENT

ஹிட்டடித்த இந்தி ரீமேக் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவித்த ஆர்.ஜே பாலாஜி 

11:45 AM Mar 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை 'வீட்ல விசேஷங்க' என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அத்துடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, 'வீட்ல விசேஷங்க' திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி பிரபல மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT