Skip to main content

அசத்தலான தோற்றத்தில் விஷால்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Veerame Vaagai Soodum

 

‘எனிமி’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'விஷால் 31' எனப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அசத்தலான தோற்றத்தில் விஷால் காட்சியளிக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்