Advertisment

'வீரமே வாகை சூடும்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷால்!

Veerame Vaagai Soodum

‘எனிமி’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

சமீபத்தில் இப்படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. இந்தப் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கடந்த 10ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

இப்படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவரும் முடிவில் உள்ள படக்குழு, படப்பிடிப்பை விரைந்து முடித்துவிட்டு அதற்கேற்ப இறுதிக்கட்டப் பணிகளை முடுக்கிவிடும் திட்டத்தில் உள்ளது.

actor vishal Veerame Vaagai Soodum
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe