Skip to main content

யுவனின் இசையில் கவனம் ஈர்க்கும் விஷால் பட தீம் மியூசிக் !

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Veeramae Vaagai Soodum theme music released

 

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

ad

 

இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் நிவேதிதா குரலில் வெளியாகியுள்ள இந்த தீம் பாடல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய்யின் விருப்ப வார்த்தை; நன்றியை வெளிப்படுத்திய விஷால்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
vishal thanked vijay for his helping 1 crore to nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ. 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த மாதம் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். 

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வங்கிக் கணக்கு மூலம் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்திருந்த நிலையில் சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி என சொன்னால் அது இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடும். ஆனால் இதயத்திலிருந்து ஒரு உதவியை செய்யும் நபருக்கு அது போதாது. அவரது உதவி நிறைய அர்த்தத்தை குறிக்கிறது.

நடிகர் சங்க புதிய கட்டட மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி கொடுத்த, எனக்கு பிடித்த நடிகர் விஜய்யை பற்றி பேசுகிறேன். உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்போது பணிகளை விரைந்து முடிக்க நீங்கள் எங்களுக்கு வலிமை அளித்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் எப்போதும் தனது ரசிகர்களை அழைக்கும் வார்த்தையான நண்பா என்ற வார்த்தையை குறிப்பிட்டு, “நன்றி நண்பா” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘கோட்’ படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்; அறிவித்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
vijay sung a song in goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’.ச்விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், "அஸ்கு லஸ்கா, கூகுள் கூகுள், செல்பி புள்ள பாடலுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் விஜய் பாடியவை. அதே படங்களில் மற்ற பாடல்களையும் எழுதிய மதன் கார்க்கி விஜய் பாடிய பாடல்களை மட்டும் குறிப்பிட்டிருந்ததால், இந்த படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடுவதாக யூகிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த இசை நிகழ்ச்சியில் விஜய்,  தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் பாடியுள்ளதாக வந்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது. முதல் முறையாக யுவன் இசையில் பாடுகிறார் விஜய் என்பது குறிப்பிடதக்கது.